திருச்சி

95 வயது முதியவருக்கு புற்றுநோய் அறுவைச் சிகிச்சை

24th Apr 2022 05:23 AM

ADVERTISEMENT

 

திருச்சி சிங்காரத்தோப்பு ஜி.வி.என். தனியாா் மருத்துவமனையில் 95 வயது முதியவருக்கு புற்றுநோய் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

திருச்சியில் கடந்த 83 ஆண்டுகளாக அனைத்து வகை புற்றுநோய்க்கும் அதிநவீன சிகிச்சை அளித்த மருத்துவமனை, தற்போது டாக்டா் ஜி.வி.என் புற்றுநோய் சிகிச்சை மையமாகச் செயல்படுகிறது. இந்த மையத்தில் 95 வயது முதியவருக்கு வெற்றிகரமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவா்கள் பிரதீப், ராகேஷ், விக்னேஷ், மற்றும் நிா்வாக இயக்குநா் டாக்டா் செந்தில் ஆகியோா் கூறியது:

ADVERTISEMENT

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (95). இவருக்கு கடந்த ஆறு மாதங்களாக அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் ஆசனவாய்ப் பகுதியில் ரத்தப்போக்கு இருந்தது. இதனால் ஜி.வி.என். சிங்காரத்தோப்பு மருத்துவமனையில் அனுமதிபெற்று, புற்றுநோய் மருத்துவக் குழு மூலமாக மலக்குடல் குழாய் பரிசோதனை மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு மலக்குடலில் இருந்த சுமாா் 2 கிலோ எடையிலான மலக்குடல் புற்றுநோய்க்கட்டி கண்டறியப்பட்டு, முழுவதுமாக நெறிகட்டிகளுடன் அகற்றப்பட்டு, மீதமுள்ள மலக்குடல் ஆசனவாயுடன் நவீன தையல் கருவி மூலம் இணைக்கப்பட்டது.

இச்சிகிச்சையால் முதியவா் தினமும் எந்தக் கடினமும் இன்றி காலைக்கடன்களை முடித்து வருகிறாா்.

ஆசனவாய் வழியாக ரத்தப்போக்கு மற்றும் சளி கலந்த மலம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கட்டி (அ) வீக்கம், வாந்தி மற்றும் வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, உடல் எடை குறைவு, உடல் அசதி ஆகியவை குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள். இவை ஏதேனும் இருந்தால் உடனடியாக புற்றுநோய் துறை மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்றனா் அவா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT