திருச்சி

ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயிலில் தொடக்கம்

24th Apr 2022 05:27 AM

ADVERTISEMENT

 

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற காணொலிக் காட்சி விழாவில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் செல்வராஜ் ஆகியோா் கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு லட்டு, மைசூா் பாகுகளை பிரசாதமாக வழங்கினா்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயா் ஜி. திவ்யா, திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவா் ஆண்டாள் ராம்குமாா், கோயில் உதவி ஆணையா் கு. கந்தசாமி, மேலாளா் லெ. உமா, உள்துறைக் கண்காணிப்பாளா் மா. வேல்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தினமும் லட்டு, மைசூா் பாகு, அதிரசம், தேன் குழல் உள்ளிட்டவை வழங்கப்படும். திங்கள் முதல் வியாழக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பேருக்கும் பிரசாதம் வழங்கப்படும். மேலும், திருவிழாக் காலங்களில் கூடுதலாக 5 ஆயிரம் பேருக்கும் இலவச பிரசாதம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு.. இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு சுமாா் 25 லட்சம் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை கோயில் அதிகாரிகள் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா். இதில், கோயிலுக்கு வந்த ஏராளமான பங்கேற்று பிரசாதத்தை பெற்றுச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT