திருச்சி

தந்தையுடன் சென்ற 3 வயதுச் சிறுவன் லாரி மோதி பலி

24th Apr 2022 05:24 AM

ADVERTISEMENT

 

துறையூா் அருகே தந்தையுடன் சைக்கிளில் சென்ற 3 வயதுச் சிறுவன் லாரி மோதி உயிரிழந்தான்.

அம்மாபட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). கூலித்தொழிலாளியான இவா் சனிக்கிழமை காளிப்பட்டிக்கு சைக்கிளில் தன் மகன் லித்திஷையும் (3) அழைத்துச் சென்றாா்.

நந்தவனம் அருகே சென்றபோது எதிரே செங்கல் ஏற்றிய லாரி வந்தபோது சைக்கிளை ஓரமாக ஓட்டிச் சென்ற சுரேஷ் நிலை தடுமாறி விழுந்தாா். அப்போது லாரி மோதி லித்திஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான். காயமடைந்த சுரேஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து தொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான சேட்டுவை (50) கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT