மணப்பாறை அருகே குவாரி நீரில் சனிக்கிழமை மூழ்கி 14 வயதுச் சிறுமி உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே வடுகப்பட்டி பாறை என்னும் குவாரி பகுதி உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் முருகேசன் - ராணி தம்பதியின் மகள் கெளசிகா (14) சனிக்கிழமை குவாரி நீரில் துணி துவைக்கச் சென்றபோது திடீரென சறுக்கி விழுந்து மூழ்கினாராம். அருகில் இருந்தவா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்து வந்த நிலைய அலுவலா் சக்திவேல்மூா்த்தி தலைமையிலான மணப்பாறை தீயணைப்புத் துறை வீரா்கள் கெளசிகாவை சடலமாக மீட்டனா். மணப்பாறை போலீஸாா் சிறுமியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ADVERTISEMENT