திருச்சி

மணப்பாறையில் இயேசு உயிர்ப்பு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

17th Apr 2022 09:55 AM

ADVERTISEMENT


மணப்பாறையில் மிகப் பழமை வாய்ந்த கிறிஸ்துவ பேராலயமான புனித லூர்து அன்னை ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த தினத்தையொட்டி நள்ளிரவு நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மத்தியில் அமைந்திருக்கும் மிகப் பழமை வாய்ந்த கிறிஸ்துவ பேராலயம் புனித லூர்து அன்னை ஆலயம். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த  தினமான ஈஸ்டர் தினத்தையொட்டி நள்ளிரவு மணப்பாறை மறை வட்ட அதிபர் ஆரோக்கிய சுந்தர்ராஜ், உதவி பங்கு தந்தை செல்வம் ஜெயமணி ஆகியோர் தலைமையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதையும் படிக்ககருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும்தானா? இளையராஜாவுக்கு தமிழிசை ஆதரவு

தேவாலயம் முழுவதும் இருள் நிரம்பி, கிறிஸ்துவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆண்டவரின் உயிர்ப்புக்காக ஜெபத்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் சரியாக 11.30 மணியளவில் இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்ததாக இயேசுவின் திருவுருவச்சிலை திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

பேராலயம் முழுவதும் ஒளி நிரம்பியது. இறைதூதர்கள் பாடிய இசை பாடல் அனைவராலும் பாடப்பட்டது. ஆலயமணிகள் அனைத்தும் ஒலித்தது. வானவேடிக்கைகளும், பட்டாசுகள் வெடித்தன. 

இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியினை கிறிஸ்துவ பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர். ஈஸ்டர் என்றால் வசந்தகாலம் என்றும் பொருள் உண்டு. அனைவரும் தேவதூதனின் உயிர்தெழுந்த வசந்தகாலத்தை வரவேற்று தங்களது ஈஸ்டர் தின மகிழ்ச்சியை உடன் இருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Tags : Easter
ADVERTISEMENT
ADVERTISEMENT