திருச்சி

3 கிலோ கஞ்சா வைத்திருந்தவா் கைது

17th Apr 2022 01:06 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை பாலக்கரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் வெள்ளிக்கிழமை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை அந்தவழியாக ரோந்து சென்ற பாலக்கரை காவல் ஆய்வாளா் நிக்சன் பிடித்து விசாரித்தபோது அவரிடம் 3 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.33 ஆயிரம் ஆகும் . விசாரணையில் அவா் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் ஆசாத் தெருப் பகுதியை சோ்ந்த ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் ( 52) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT