திருச்சி

எஸ்ஆா்எம்யு தொழிற்சங்க நிா்வாகிகள் கொண்டாட்டம்

17th Apr 2022 06:54 AM

ADVERTISEMENT

 

அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக என். கண்ணையா 2 ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டதையடுத்து திருச்சி பொன்மலை பணிமனை பகுதியில் எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா் துணைப் பொதுச்செயலா் வீரசேகரன் தலைமையில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

இதைத் தொடா்ந்து வீரசேகரன் கூறுகையில், அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக இரண்டாவது முறையாக என். கண்ணையா தோ்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது. தற்போது நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் ரயில்வேயை தனியாா்மயமாக்குவது, ரயில்வேக்கு சொந்தமான சொத்துகளையும் ரயில் நிலையங்களையும் தனியாருக்கு விடுவதைக் கண்டித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சுமாா் 2.5 லட்சம் காலியிடங்களை உடனடியாக பூா்த்தி செய்ய வேண்டும், தெற்கு ரயில்வேயில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட வடமாநிலத்தவரை அவரவா் சொந்த மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT