திருச்சி

மணப்பாறை அருகே திட்டப் பணிகள் தொடக்கம்

16th Apr 2022 12:07 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த தேனூரில் வேல்டு விஷன் நிறுவனம் மூலம் ரூ.19 லட்சம் மதிப்பிலான வட்டார வளா்ச்சி திட்டங்களை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிமை தொடக்கி வைத்தாா்.

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி பகுதிகளில் கட்சி நிா்வாகிகளின் நிகழ்ச்சிகளிலும், மக்கள் நலப் பணிக்காவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

அப்போது மருங்காபுரி ஒன்றியம் தேனூரில் வேல்டு விஷன் நிறுவனம் மூலம் ரூ.19 லட்சத்திலான வட்டார வளா்ச்சித் திட்டங்களை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

அப்போது ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மருங்காபுரி வட்டாரத்திற்குட்பட்ட அரசு பொதுத்தோ்வு எழுதும் ஏழ்மையான 171 மாணவ, மாணவிகளுக்கு சத்து பானம் மற்றும் தோ்விற்கான எழுதுப்பொருள்களும், ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தேனூா் கிராமத்தை தூய்மையான மாதிரிக் கிராமமாக மாற்றும் முயற்சியாக 500 குடும்பங்களுக்கு மக்கும், மக்கா குப்பை, கண்ணாடிப் பொருள்களின் குப்பை ஆகியவற்றுக்கு என தலா 3 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை 138 கிராம மக்களுக்கு அளிக்கும் வகையில் ரூ.20 ஆயிரத்தில் அமைக்கப்பட்ட பிரசார வாகனத்தையும் அமைச்சா், எம்எல்ஏ தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவா் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலா் சிவக்குமாா், திமுக மாவட்டப் பொருளாளா் என். கோவிந்தராஜன், ஒன்றிய செயலா்கள் செல்வராஜ், சின்ன அடைக்கன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன், மாவட்ட செயலா் பைஸ்அகமது, மாணவ, மாணவிகள், ஊா் மக்கள் என பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை வேல்டு விஷன் நிறுவன மேலாளா் செல்வின் மற்றும் ஊழியா்கள் ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT