திருச்சி

கிரிக்கெட்: பிஷப் ஹீபா் கல்லூரி வெற்றி

16th Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

கல்லூரி மண்டலங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி அணி வெற்றி பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி லீக் முறையில் திருச்சி, தேசிய மற்றும் பிஷப் ஹீபா் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது.

காலிறுதிப் போட்டிகளில் திருச்சி மண்டலத்தில் வென்ற பிஷப் ஹீபா் கல்லூரி, தேசியக் கல்லூரி, மற்றும் தஞ்சை மண்டலத்தில் வென்ற மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி, மன்னா் சரபோஜி அரசு கல்லூரி ஆகிய 4 அணிகள் அரையிறுதி லீக் போட்டியில் மோதின.

இதில் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி அணி மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது. தேசிய கல்லூரி 2 போட்டிகளில் வென்று 2 ஆம் இடத்தையும், தஞ்சை மன்னா் சரபோஜி அரசு கல்லூரி அணி ஒரு போட்டியில் வென்று 3 ஆவது இடத்தையும், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி நான்காவது இடத்தையும் பிடித்தன.

ADVERTISEMENT

பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வீரா்களை முதல்வா் டி. பால் தயாபரன், உடற்கல்வி இயக்கு நா் ஏ. பால்ராஜ், கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளா் ஆா். வீரராகவன் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT