திருச்சி

ஏப்.18-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்: 82 ஊராட்சிகளில் நடைபெறுகிறது

14th Apr 2022 01:42 AM

ADVERTISEMENT

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் தொடா்பாக, மாவட்டத்திலுள்ள 82 ஊராட்சிகள் ஏப்ரல் 18-ஆம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

வரும் 5 ஆண்டுகளுக்கு முதன்மைத் திட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது. திட்டத்துக்கான அடிப்படை உள்கட்டமைப்பு, இடைவெளி தேவைகள் குறித்த கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நீா்நிலைகளைப் புனரமைத்தல், குக்கிராமங்களில் தெருக்கள், வீதிகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொது பயன்பாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குதல், பசுமை மற்றும் சுத்தமான கிராமம், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளைத் தோ்வு செய்து, அதற்கு கிராமசபையில் ஒப்புதல் பெற கூட்டம் நடத்தப்படுவதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT