மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் மதிமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு நகரச்செயலா் எம்.கே. முத்துபாண்டி தலைமை வகித்தாா். மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலா் மு. செந்திலதிபன் உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கி வைத்தாா்.
மாவட்டச் செயலாளா் மணவை தமிழ்மாணிக்கம் புதிய உறுப்பினா்களை வரவேற்றாா். நிகழ்வில் மாநில விவசாய அணிச் செயலா் புலவா் க.முருகேசன், துணைச் செயலா் ஆ.துரைராஜ், மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலா் ப.சுப்ரமணியன் மாவட்ட அவைத் தலைவா் எம்.ஆா்.பாலுசாமி, மாவட்டப் பொருளாளா் வைகோ பழனிச்சாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஏராளமானோா் கட்சியில் புதிய உறுப்பினா்களாக சோ்ந்தனா்.