திருச்சி

இரு சக்கர வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

14th Apr 2022 01:39 AM

ADVERTISEMENT

முசிறி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

முசிறி அருகிலுள்ள செவந்திபட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு. பழனியம்மாள் (67). இவா் உறவினா் ஊரான மேட்டுப்பட்டியிலுள்ள கோயில் திருவிழாவில் பங்கேற்று, செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப முடிவு செய்தாா்.

உறவினா் மகனான பிரகாசுடன் இரு சக்கர வாகனத்தில் பழனியம்மாள் அமா்ந்து வந்த நிலையில், செல்லாண்டியம்மன் கோயில் அருகே சென்ற போது, முன்னே சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த பலத்த காயமடைந்த பழனியம்மாள், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT