மணப்பாறை அருகே எல்லையம்மன் கோவில் ஐம்பொன் கலசங்கள் திருடப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு எல்லையம்மன் ஆலயத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோயில் மேல் உள்ள கோபுரத்தில் நான்கு கலசத்தில் சுமார் ஒன்றரை அடி உயர மூன்று ஐம்பொன்னால் ஆன கலசங்களை திருடி சென்றனர்.
திருட்டு குறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபுர கலசத்தை திருடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் கோபுர கலசம் திருடு போனதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT