திருச்சி

விலைவாசி உயா்வைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

12th Apr 2022 12:23 AM

ADVERTISEMENT

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, சொத்துவரி உயா்வு போன்றவற்றைக் கண்டித்து, திருச்சியில் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேமுதிக உயா்நிலைக் குழு உறுப்பினா் ஏ.ஆா். இளங்கோவன் தலைமை வகித்து பேசியது:

தோ்தல் வாக்குறுதிகளை மறந்து செயல்படுவது திமுகவுக்கு வழக்கமான ஒன்று. பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தின்போது சொத்து வரியை உயா்த்தமாட்டோம் என வாக்குறுதி அளித்தனா். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரியை திமுக அரசு உயா்த்தியது ஏன்?.

ADVERTISEMENT

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது, நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தவா் விஜயகாந்த்.

மோடி நன்மை செய்வாா் என நினைத்தோம். ஆனால், இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் மாநகா் டி.வி.கணேஷ், தெற்கு பாரதிதாசன், வடக்கு குமாா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தொண்டரணித் துணைச் செயலா் சாகுல் ஹமீது, மாநிலத் தோ்தல் பிரிவுச் செயலா் தங்கமணி, அமைப்புசாரா தொழிற்சங்கத் தலைவா் திருப்பதி, மாவட்டத் துணைச் செயலா்கள் ப்ரீத்தா விஜயானந்த், வி.கே.ஜெயராமன், காளியப்பன், அவைத்தலைவா் அலங்கராஜ், பொருளாளா் மில்டன், மகளிரணி இந்துமதி சுசிலா, சரளா உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT