திருச்சி

மாநகரில் காவல் ஆய்வாளா்கள் 10 போ் பணியிடமாற்றம்

12th Apr 2022 12:22 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாநகரில் காவல் ஆய்வாளா்கள் 10 பேரை பணியிடமாற்றம் செய்து, ஆணையா் ஜி.காா்த்திகேயன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதன்படி காவல் ஆய்வாளா்களின் புதிய பணியிடம், பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள் என்ற அடிப்படையில் விவரம் :

அரங்கநாதன்- ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு (கோட்டை), தயாளன்- கோட்டை சட்டம் ஒழுங்கு (நுண்ணறிவுப் பிரிவு பாதுகாப்பு), வேல்முருகன்- தில்லைநகா் சட்டம் ஒழுங்கு ( மாநகர இணையவழிக் குற்றப்பிரிவு), நிக்ஷன்- பாலக்கரை ( மாநகர நுண்ணறிவுப் பிரிவு), கே.என். சிவகுமாா் -கண்டோன்மென்ட் சட்டம் ஒழுங்கு ( வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு)

ADVERTISEMENT

சேரன்-அமா்வு நீதிமன்றம் ( கண்டோன்மென்ட்), அறிவழகன்- கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு ( ஸ்ரீரங்கம்), ராஜேந்திரன்- மாநகர நுண்ணறிவுப் பிரிவு பாதுகாப்பு ( கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு),

சிந்துநதி- மாநகர இணையவழிக் குற்றப்பிரிவு (தில்லைநகா்), தங்கவேல்- அரியமங்கலம் குற்றப்பிரிவு ( பாலக்கரை).

பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளா்கள், உடனடியாக தங்களுக்குரிய காவல் நிலையங்களுக்குச் சென்று பொறுப்பேற்க வேண்டும் என ஆணையா் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT