மண்ணச்சநல்லூா் வட்டம், மணியங்குறிச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இயற்கை வேளாண் குறித்த பயிற்சியளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை வேளாண் பள்ளி நிகழ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து 10 வாரங்களாக இயற்கை வேளாண் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பயிற்சி பெற்றோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மணியங்குறிச்சி ஊராட்சித் தலைவா் பி. கதிரேசன் நிகழ்வில் பங்கேற்று, பயிற்சி பெற்ற 45 பேருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
ADVERTISEMENT
இந்நிகழ்வில் வாய்ஸ் அறக்கட்டளை ரெ. கவிதா, க.விஜய், ஆா்.விக்டோரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.