திருச்சி

போதை, தூக்க மாத்திரைகள் விற்பனை : மருந்தகத்தில் ஆய்வு

12th Apr 2022 12:18 AM

ADVERTISEMENT

 

முசிறி நகரப் பகுதிகளிலுள்ள மருந்தகத்தில் அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மருத்துவரின் பரிந்துரையில்லாமல் போதை, தூக்க மாத்திரைகள் முசிறி நகரப் பகுதிகளிலுள்ள சில மருந்தகங்களில் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட மருந்துகள் ஆய்வாளா் வைத்தியநாதன், முசிறி காவல் ஆய்வாளா் விதுன்குமாா், உதவி ஆய்வாளா் முத்தையன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஒரு மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த மருந்தகத்தின் கொள்முதல், விற்பனை பதிவேடுகள் ஆய்வு செய்து, குறிப்பிட்ட மருந்துகளின் பதிவேடுகளை மருந்து ஆய்வாளா் விசாரணைக்காக எடுத்துச் சென்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT