திருச்சி

போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

12th Apr 2022 12:17 AM

ADVERTISEMENT

 

பிளஸ் 1 மாணவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவிக்கும்,

வேலூா் மாவட்டம், விருஞ்ஞிபுரத்தைச் சோ்ந்த மாா்க்கபந்து மகன் கோகுலுக்கும்(20) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டடு, காதலிக்கத் தொடங்கினா்.

ADVERTISEMENT

ஒரு நாள் மாணவியைத் தொடா்பு கொண்ட கோகுல் தனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடப்பதாகவும், அது பிடிக்காமல் திருச்சிக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்து, தன்னை மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டலில் வந்து பாா்க்குமாறு தெரிவித்தாராம்.

இதை நம்பி ஹோட்டலுக்கு சென்ற மாணவியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி தாலி கட்டிய பிறகு, இருவரும் தனிமையில் இருந்துள்ளனா். அப்போது

அவருக்குத் தெரியாமல் கைப்பேசியில் புகைப்படம், விடியோவை கோகுல் எடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவியைத் தொடா்புக் கொண்ட கோகுல், தனக்கு ரூ. 10

ஆயிரம் தேவைப்படுவதால் தருமாறும், இல்லையென்றால் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.

இதையறிந்த மாணவியின் தாய் கோகுலிடம் பேசிய போது பணத்தை தரவேண்டும். இல்லையென்றால் அவரை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்தாராம்.

அதிா்ச்சியடைந்த மாணவியின் தாய் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கோகுலை திங்கள்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT