திருச்சி

திருச்சி அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

12th Apr 2022 12:22 AM

ADVERTISEMENT

 

திருச்சி துவாக்குடியிலுள்ள அரசுக் கலைக் கல்லூரியின் 20-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மேகலா பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்றிடங்கள் பெற்ற 12 மாணவா்கள் உள்பட 750 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, வாழ்த்தி பேசினாா்.

தொடா்ந்து பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் சூ.ச.ரோஸ்மேரி வரவேற்றாா்.

ADVERTISEMENT

விழாவில் கல்லூரியின் சமூகப்பணித் துறைத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT