திருச்சி

பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

12th Apr 2022 12:18 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் பாஜக பட்டியல் அணி சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பட்டியலினய மக்களை கல்வித் தரத்தில் உயா்நிலைக்கு கொண்டு வர பாடுபட்ட ஜோதி ராவ் புலே, சாவித்திரிபாய் புலே ஆகியோரது ஜயந்தி விழா நாடு முழுவதும் பாஜக பட்டியல் அணி சாா்பாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதன்படி மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட திருவெறும்பூா் மண்டல் பாஜக பட்டியல் அணி சாா்பில், காட்டூா் அரசு ஆதிதிராவிட பெண்கள் நல மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

நிகழ்வுக்கு மாவட்டத் துணைத் தலைவா் சி. இந்திரன் தலைமை வகித்தாா். மண்டல் தலைவா் ஆா்.பி. பாண்டியன் முன்னிலை வகித்தாா். திருச்சி மாநகா் மாவட்டத் பாஜக தலைவா் ந. ராஜசேகரன், மாநில பட்டியல் அணி பொதுச் செயலா் சத்திரப்பட்டி எஸ். பால்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

மண்டலப் பொதுச் செயலா் ரங்கராஜன், ஓபிசி அணி மாவட்ட நிா்வாகிகள் காா்த்திகேயன், அஸ்வினி முருகேசன், திருச்சி நகா் மாவட்ட பட்டியல் அணி பொறுப்பாளா் தென்னூா் பூபதி, இளைஞரணி மண்டல் தலைவா் ராம்கி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிறைவில், பள்ளித் தலைமையாசிரியை சுமதி நன்றி கூறினாா். துணைத் தலைமையாசிரியை செல்வி, ஆசிரியா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT