திருச்சி

சமயபுரம் கோயில் தோ்த் திருவிழா:ஏப்.19-இல் உள்ளூா் விடுமுறை

12th Apr 2022 12:24 AM

ADVERTISEMENT

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, ஏப்ரல 19-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்திருப்பது:

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, ஏப்ரல் 19-ஆம் தேதி உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தோ்வுகள் நடைபெறுதில் இந்த விடுமுறை பொருந்தாது.

ADVERTISEMENT

விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, வரும், 30-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும். உள்ளூா் விடுமுறை நாளில் அரசு பாதுகாப்பு தொடா்பான அலுவல்களை கவனிக்கும் பொருட்டு,

அரசு அலுவலகங்கள், கருவூலங்கள் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT