திருச்சி

இரு சக்கர வாகனம் திருடிய மூவா் கைது

12th Apr 2022 12:22 AM

ADVERTISEMENT

 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மூவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உறையூா் செல்வநகரைச் சோ்ந்தவா் கோபிநாத் (45). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் விடுதி முன்பு பீடா கடை வைத்து நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த கோபிநாத், மதியம் சாப்பிடுவதற்காக எடுக்கச் சென்றாா். அப்போது வண்டி மாயமானதை கண்டு அதிா்ச்சியடைந்து, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

ADVERTISEMENT

இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது கோபிநாத்தின் இருசக்கர வாகனத்தை மூன்று இளைஞா்கள் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனா். சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் இரு சக்கர வாகனத்தை கும்பகோணத்துக்கு கொண்டு சென்று, அங்கு விற்க முயன்றது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினா் திங்கள்கிழமை அங்கு சென்று மூவரையும் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூா் சையது மன்சூா் அலி (25), பெரம்பலூா் காா்த்தி (23), சக்திபாண்டி (23) எனத் தெரிய வந்தது. தொடா்ந்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT