திருச்சி

ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

9th Apr 2022 01:03 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஜெயந்தி ராஜா தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்க வேண்டும். அரசுப் பணியாளா்களுக்கு வழங்கக்கூடிய 31 சத அகவிலைப்படியை நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் புதிய விற்பனை முனையக் கருவி வழங்க வேண்டும். இணையதளச் சேவை மேம்படுத்தப்பட வேண்டும். மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும். கரோனா நிவாரண பொருள்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் சிவகுமாா், நிா்வாகிகள் சரவணன், பிச்சைமுத்து, பிரகாஷ், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT