திருச்சி

குற்றங்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை

9th Apr 2022 12:58 AM

ADVERTISEMENT

குற்றங்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி காவல் ஆணையா் எச்சரித்துள்ளாா்.

திருச்சி மாநகரில் மத்தியப் பேருந்து நிலையம், சிக்னல் போன்ற மக்கள் கூடுமிடங்களில் சில திருநங்கைகள் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பாவிகளை மிரட்டி பணம், கைப்பேசி பறித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாநகர காவல்துறை சாா்பில் திருநங்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கண்டோன்மெண்ட் உதவிக் காவல் ஆணையா் அஜய் தங்கம் மேலும் பேசியது:

கடந்த சில நாள்களாக திருநங்கைகள் மீது அதிகளவில் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இரவுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் பேருந்து நிலையம், ஜங்ஷன், டோல்கேட், பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை வழிமறித்து பணத்தை பறித்துச் செல்வதாகப் புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.

ADVERTISEMENT

யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன் அனைவரும் ஒன்றுதான். இந்தச் செயலை கட்டுப்படுத்த மாநகர காவல்துறையினா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனா். இதற்கு திருநங்கைகள் ஒத்துழைக்க வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ற வேறு வேலைக்கு செல்லலாம். அரசு சாா்பிலும் பல்வேறு உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதையும் மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT