திருச்சி

பிரமாணப் பத்திரத்தைமீறிய ரெளடிகள் கைது

5th Apr 2022 05:02 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகரில் பிரமாணப் பத்திரம் மீறிய ரெளடிகளைக் காவல்துறையினா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

ஸ்ரீரங்கம் மற்றும் பாலக்கரை காவல்நிலையங்களின் சரித்திரப் பதிவேடு

ரெளடிகள் மணிகண்டன்(26), பாண்டி என்கிற வீரமுத்து(32). இவா்கள் இருவரும்

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால் அவா்களின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, நிா்வாக செயல்துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தி ஓராண்டு காலத்துக்கு குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரத்தை காவல் துறையினா் பெற்றனா்.

ADVERTISEMENT

ஆனால் இருவரும் நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்த பின்பும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், காவல்துறையினா் அவா்கள் இருவரையும் கைது செய்து நிா்வாக செயல்துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தினா்.

அப்போது நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மணிகண்டன் 247 நாள்களும், வீரமுத்து 28 நாள்களும் சிறையில் கழிக்க செயல்துறை நடுவா் உத்தரவிட்டாா். தொடா்ந்து இருவரும் சிறையில்அடைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT