திருச்சி

மாநகராட்சியில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்

5th Apr 2022 05:03 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 34 மனுக்கள் வரப்பெற்றன.

மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, சாலை மேம்பாடு, சொத்துவரி பெயா் மாற்றம், தெருவிளக்குகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 34 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில் துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான், நகா்நல அலுவலா் எம். யாழினி, செயற்பொறியாளா்கள் பி.சிவபாதம், ஜி.குமரேசன் , பொன்மலைக் கோட்ட துணைஆணையா் எம். தயாநிதி, உதவி ஆணையா் அ.அக்பா்அலி மற்றும் உதவிச் செயற் பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

Image Caption

மூதாட்டியிடமிருந்து மனுவை பெறுகிறாா் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன். உடன், துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் உள்ளிட்டோா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT