திருச்சி

துறையூரிலிருந்து திருநள்ளாறுக்குஅரசுப் பேருந்து இயக்க வேண்டும்

5th Apr 2022 05:06 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து திருநள்ளாறுக்குத் தனி அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு சமூக ஆா்வலா் சரவணன் இணையவழியில்அளித்த கோரிக்கை மனு:

சனிக் கிரகப் பரிகாரத் தலமான திருநள்ளாறு கோயிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துறையூா் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூா், பேரளம் வழியாக பேருந்து இயக்க வேண்டும்.

இவ்வாறு பேருந்து இயக்குவதலால், துறையூா் பகுதி மக்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து திருநள்ளாறுக்கு பேருந்தில் ஏறி பயணிப்பதால் அனுபவிக்கும் காலவிரயம், அலைகழிப்பு உள்ளிட் நடைமுறை சிரமங்களும் குறையும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT