திருச்சி

கிராவல் மண் அள்ளிய 4 போ் கைது

2nd Apr 2022 02:17 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே கிராவல் மண் அள்ளிய 4 பேரை மணிகண்டம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் துணை காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் நவல்பட்டு காவல் ஆய்வாளா் வெற்றிவேல், மணிகண்டம் போலீஸாா் வியாழக்கிழமை கோலாா்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மணிகண்டத்தை அடுத்த கோலாா்பட்டி அருகே உள்ள குளத்தில் கிராவல் மண் அள்ளிய ஒரு பொக்லைன் இயந்திரம், 3 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மண் அள்ளிய லாரி ஓட்டுநா்கள் மேலபஞ்சப்பூா் மகாலிங்கம் (50), ராமு (45), கீழபஞ்சப்பூா் கருப்பையா (60), பொக்லைன் ஆபரேட்டா் மேக்குடி மருதுபாண்டி (27) ஆகியோரை மணிகண்டம் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்களை திருச்சி ஜே.எம். 4 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் வாகனங்களின் உரிமையாளா்கள் கோடீஸ்வரன், வடிவேல் ஆகியோரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT