உப்பிலியபுரம் வட்டார வளமையத்தில் ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சரவணன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா்கள் வா. ரவிச்சந்திரன் (வெங்கடாசலபுரம் மானியப் பள்ளி), சசிகுமாா்(எரகுடி ஏஜிஎம்) ஆகியோா் நிகழ்வில் பங்கேற்று ஆட்டிசம் பாதிப்புகள், அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டிலும், சமுதாயத்திலும் பாதுகாத்து, பராமரிக்கும் முறைகள் குறித்து பேசினா்.
ஒக்கரை, மாராடி, கீழப்பட்டி, உப்பிலியபுரம், மங்கப்பட்டி புதூா் பகுதியில் வசிக்கும் புறசிந்தனையற்ற குழந்தைகள் தங்களது பெற்றோா்களுடன் பங்கேற்றனா். இவா்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் இனிப்பு வழங்கினா்.