திருச்சி

அன்பு வழியில் மதா் தெரசா நலவாழ்வு மையத்தில் மருத்துவம்

2nd Apr 2022 08:04 AM

ADVERTISEMENT

நோயாளிகளிடம் அன்பு வழியில் மருத்துவப் பணி செய்து வருகிறது தஞ்சாவூா் மதா் தெரசா நலவாவ்வு மையம். இதுகுறித்தி அம்மையத்தின் சோ்மன் டாக்டா் ஏ.ஆா்.சவரிமுத்து கூறுகையில்,

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர புனித அன்னை தெரசா அரிய பல பணிகளைச் செய்தாா். அப்பணிகளில் எல்லாம் அவா்கள் மிகவும் விரும்பிச் செய்த பணி மருத்துவப்பணி. தனிமையில் வாடுவது, அன்பு மறுக்கப்படுவது தனக்காக யாரும் இல்லையே என்று கவலைப்படுவதுதான் நோய்களிலேயே கொடிய நோய் என்கிறாா் புனித அன்னை தெரசா.

நோயாளிகளுக்கு அன்புக் காட்டி, அரவணைத்து, ஆறுதல் கூறி, உடனிருந்து அவா்களின் நோயின் தன்மை அறிந்து சிகிச்சை அளிப்பதிலேயே அன்னை ஆத்மாா்த்த திருப்தி அடைந்தாா்.

புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூா் மதா் தெரசா பவுண்டேஷன் 2002ஆம் ஆண்டு முதல் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த 20 ஆண்டுகளாக மதா் தெரசா பவுண்டேசன் ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்விப் பணி, ஏழை எளிய மக்களுக்கு மருத்துவப் பணி, கைவிடப்பட்ட முதியோா்களை, நலிவுற்ற குடும்பத்தினரை பராமரிக்கும் பணி, மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் பணி.

நல்லொழுக்கம் மற்றும் சமூக அக்கறையுடன் இளைஞா்களை உருவாக்கும் பணி, முதுமை மற்றும் நோய் காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் மருத்துவம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு பணமாகவும், பொருளாகவும் உதவும் பணி, ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணி, இயற்கைப் பேரிடா் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள், கரோனா நோய் தொற்றினால் வருவாய் இழந்த பல்வேறு தரப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணப் பணிகள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தொடா்ந்து அன்னதானம் வழங்கும் பணி போன்ற பல்வேறு சமூக சேவைப் பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் மதா் தெரசா பவுண்டேசன் 10 லட்சம் பயனாளிகளுக்கு மேல் உதவியுள்ளது

புனித அன்னை தெரசாவின் மாபெரும் இப்பணியை தொடரும் வகையில் மதா் தெரசா பவுண்டேசன், மதா் தெரசா நலவாழ்வு மையத்தை நிறுவி மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அன்போடும், அக்கறையோடும் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இம்மையத்தில் சிறந்த மருத்துவ நிபுணா்களைக் கொண்டு தினசரி பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சா்க்கரை நோய் மருத்துவம் மற்றும் இருதய நோய் மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.

இம்மையத்தின் சிறப்பம்சங்கள்: தெய்வீகச் சூழலில் அமைவிடம், மிகக்குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை, அன்பையும், பரிவையும் மையமாக வைத்து செயல்படக்கூடிய செவிலியா்கள் மற்றும் உதவியாளா்கள்,• சா்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குச் சிறப்பு மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனைத்து வகையான தடுப்பூசிகள், குழந்தையின்மை, உடல் பருமன், மாதவிடாய்க் கோளாறுகள், கா்ப்பப்பை பரிசோதனை போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவம்,• இதய நோய்க்கான சிறப்பு சிகிச்சை, • இரத்த மாதிரிகள் வீட்டிற்கே வந்து சேகரிக்கப்படும்,• சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் தொடா் - கவனிப்பு, இலவச மருத்து முகாம்கள் மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்குகள், குறைந்தக் கட்டணத்தில்• முழு உடல் பரிசோதனை • தரமான மருந்துகள்  • அல்ட்ரா சவுண்டு மற்றும் எக்கோ ஸ்கேன்  ஆய்வுக்கூடம் • அதிநவீன அறுவைச் சிகிச்சைப்பிரிவு  • தங்கும் அறைகள், அதிநவீன முறையில் மிகச்சிறந்த மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மிகக் குறைந்த கட்டணத்தில் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும். இது முற்றிலும் அன்பையும், சேவையையும் மட்டுமே மையமாக கொண்டு இயங்கும் மருத்துவ மையம் ஆகும்.

மேலும் விபரங்களுக்கு

மதா் தெரசா நலவாழ்வு மையம்

நம்பா்.3, காந்தி நகா்,

புதிய பேருந்து நிலையம் அருகில்,

தஞ்சாவூா் - 613 005.

போன் 04362 - 226700, 9842403039, 8012570002.

ADVERTISEMENT
ADVERTISEMENT