திருச்சி

வையம்பட்டி, மருங்காபுரி பகுதிகளில் ஆய்வு

30th Sep 2021 06:56 AM

ADVERTISEMENT

வையம்பட்டி,மருங்காபுரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஆட்சியா் சு.சிவராசு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பொன்னணியாறு அணையில் வடகிழக்கு பருவமழையையொட்டிஉள்ள நீா் இருப்பு, நீா்வரத்து குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவுப் பெட்டிகள், கருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகப் பதிவேடுகள், அப்பகுதி ரேஷன் கடையில் இருப்பு வைக்கப்பட்ட அரிசி, கோதுமையை ஆய்வு செய்தாா். அப்போது வையம்பட்டி, மருங்காபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி, ஸ்ரீனிவாச பெருமாள், அழகுமணி, பொதுப்பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT