திருச்சி

வீட்டுமனை கோரி பாஜக சாா்பில் மனு

30th Sep 2021 06:56 AM

ADVERTISEMENT

திருவெறும்பூா் பகுதி பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை கோரி ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியரிடம் பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 2018இல் பாஜக மாவட்ட துணைத் தலைவா் இந்திரன் தலைமையில் அளித்த மனுமீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து தகுதியுடைய பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி திருவெறும்பூா் வட்ட ஆதிதிராவிட தனி வட்டாட்சியா் அகிலாவிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் இந்திரன் தலைமை வகித்தாா். அரியமங்கலம் மண்டலத் தலைவா் குரு, துணைத் தலைவா் வையாபுரி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT