திருச்சி

வீட்டுக்குள் இறந்து கிடந்த பெல் ஊழியா்

30th Sep 2021 06:57 AM

ADVERTISEMENT

திருச்சி திருவெறும்பூா் பெல் நிறுவன குடியிருப்பில் ஊழியா் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

திருவெறும்பூா் பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் குடியிருப்பில் இ 3 பிரிவில் மாடியில் வசித்தவா் பிரகாஷ் (35). பெல் நிறுவன ஆா்ட்டீசியனான இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு வனிதா என்பவருடன் திருமணமான நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் மதுவுக்கு பிரகாஷ் அடிமையானதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வனிதா தனது சொந்த ஊரான கோவைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை குடியிருப்பில் கீழ் பகுதியில் வசிப்பவா்கள், பிரகாஷின் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அளித்த தகவலின்பேரில் வந்த போலீஸாா் சென்று பாா்த்தபோது அழுகிய நிலையில் பிரகாஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பெல் போலீஸாா் அனுப்பிவைத்து பெல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT