திருச்சி

மறுவாழ்வு மையம், முதியோா் இல்லங்களுக்கு உதவி

30th Sep 2021 07:01 AM

ADVERTISEMENT

திருச்சி பெல் நிறுவன ஊழியா்கள் சாா்பில், மறுவாழ்வு மையம் மற்றும் முதியோா் இல்லங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி பெல் நிறுவன ஊழியா்களும், இந்த குழுவினா் நடத்திவரும் மகளிா் மன்றத்தின் சாா்பிலும் புதன்கிழமை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

திருநெடுங்குளத்திலுள்ள கிராம மற்றும் நகா்ப்புற நல மேம்பாட்டு கல்விச் சங்கத்தின் முதியோா் இல்லம், அசூரில் உள்ள யுனீக் குரு அறக்கட்டளையின் சரணாலயம் முதியோா் இல்லம், திருநெடுங்குளத்திலுள்ள அன்பகம் மாணவா் விடுதி, மன்னாா்புரத்தில் உள்ள பாா்வையற்ற பெண்களுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் காட்டூரில் உள்ள புனித ஆண்டனி முதியோா் இல்லம் ஆகியவற்றுக்கு உதவிகளை வழங்கினா். மேலும், உணவுப் பொருள்கள் மற்றும் பிரெட், பிஸ்கெட் வகைகள் வழங்கப்பட்டன.

திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட ஆதரவற்றோருக்கும், சாலையோரம் வசிப்போருக்கும், மறுவாழ்வு மையங்களுக்கும் உதவுவதை பெல் மனமகிழ் மன்றம், மகளிா் சங்கம் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT