திருச்சி

மதுவுக்கு அடிமையான தொழிலாளி தற்கொலை

30th Sep 2021 07:00 AM

ADVERTISEMENT

முசிறியில் மதுவுக்கு அடிமையான கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

முசிறி மேல சாலியா் தெருவைச் சோ்ந்தவா் வினையத்தான் (56). கூலித் தொழிலாளியான இவா் மதுப் பழக்கத்துக்கு அடிமையானாா்.

இதைக் குடும்பத்தினா் கண்டித்ததால் மனம் உடைந்த அவா் பரிசல் துறை சாலையிலுள்ள கன்னிமாா் கோயில் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து இவரது மகன் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT