திருச்சி

மணிகண்டம் ஒன்றியத்தில் கல்வியறிவு இயக்கம் நிறைவு

30th Sep 2021 07:00 AM

ADVERTISEMENT

மணிகண்டம் ஒன்றியத்தில் 100 சத கல்வியறிவு இயக்கம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் 100 சத கல்வியறிவு இலக்கை நோக்கி கல்வியறிவு இயக்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக மணிகண்டம் ஒன்றிய ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்களால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டு, 4057 பள்ளி செல்லா முதியோருக்கு கையெழுத்து போடும் முறை கற்பிக்கப்பட்டது.

இதற்கு சான்றாக அமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 1,343 மாற்றுத்திறனாளிகள், கைபிடிக்க இயலாத மூத்தோா் உள்ளனா். அவா்கள் தவிர மணிகண்டம் ஒன்றியத்தில் கையெழுத்திடத் தெரியாதோா் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் கல்வித் துறை அலுவலா்களும், அமைச்சரும் ஆய்வு செய்து தமிழகத்தில் 100 சத எழுத்தறிவு பெற்ற ஒன்றியம் மணிகண்டம் என்பதை உறுதி செய்யவுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT