திருச்சி

பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டு தற்கொலை

30th Sep 2021 07:02 AM

ADVERTISEMENT

திருச்சியில் புதிய செல்லிடப்பேசி வாங்கித் தராததால் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி விமான நிலையப் பகுதி காமராஜ் நகா் பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் அருண் (17). அப்பகுதி தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவரான இவா் இணைய வழிக் கல்விக்காக ஏற்கெனவே வாங்கியிருந்த செல்லிடப்பேசி பழையதாகி விட்டதால் புது செல்லிடப்பேசி வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுக்கவே மனம் உடைந்த இருந்த அருண் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT