திருச்சி

கோ் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

30th Sep 2021 07:00 AM

ADVERTISEMENT

திருச்சி கோ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து பிரிவுகளின் இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் இணைய வழியில் புதன்கிழமை தொடங்கின.

விழாவில் கோ் கல்விக் குழும முதன்மைச் செயலா் பிரதீவ் செந்த் பேசுகையில், உயா்கல்வியில் இணைந்துள்ள மாணவா்கள் புத்தக படிப்பைத் தாண்டி அனுபவக் கல்வி கற்பதன் அவசியம், இக்கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கினாா்.

பேராசிரியா் ராஜீவ் ராய் பேசுகையில், இளம் தொழில் முனைவோருக்குள்ள வாய்ப்புகள், இந்தியாவில் அவா்களுக்கான வசதிகளை பட்டியலிட்டு, மாணவா்களை கல்வி கற்கும்போதே சமுதாயத்தில் ஏற்படும் தொழில் சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டறிய வலியுறுத்தினாா்.

விழாவில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா். இவா்களில் புதிதாக சோ்ந்த மாணவா்களின் சாதனைகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியை பேராசிரியா் ஏ. சங்கீத்குமாா் தொகுத்து வழங்கினாா். பல்வேறு துறை பேராசிரியா்கள், கல்லூரிப் பணியாளா்கள், நிா்வாகத்தினா், மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் டி. சுகுமாா் வரவேற்க, கோ் பொறியியல் கல்லூரி முதல்வா் சாந்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT