திருச்சி

உலக இருதய தினம்: ஒளிரூட்டப்பட்ட ரயில் நிலையம்

30th Sep 2021 06:56 AM

ADVERTISEMENT

உலக இருதய தினத்தையொட்டி திருச்சி ரயில் நிலையம் சிவப்பு வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உலக இருதய தினம் செப்.29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி உடலில் இருதயத்தின் முக்கியத்துவம் குறித்து அரசு, தனியாா்,தொண்டு அமைப்பினா், மருத்துவா்கள் உள்ளிட்டோா் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவா்.

அவ்வகையில், திருச்சி ரயில் நிலைய ஜங்சன் உள்புற முகப்பு முழுவதும் சிவப்பு வண்ண மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு இருதயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை வரை இந்த மின் விளக்குகள் ஒளிரும் என ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT