திருச்சி

அமைப்புசாரா தொழிலாளா்கள் இணையத்தில் பதிய ஏற்பாடு

30th Sep 2021 06:55 AM

ADVERTISEMENT

அமைப்பு சாரா தொழிலாளா்கள் இணையதளத்தில் பதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை சாா்பில் இதர அமைப்பு சாரா தொழிலாளா்களைப் பதிவு செய்தல் தொடா்பான கூட்டம் தொழிலாளா் துறை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் தொழிலாளா் ஆணையா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வணிகா் சங்க பேரவை மாநில பொதுச் செயலா் வி. கோவிந்தராஜன், மாவட்ட வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் ஸ்ரீதா், மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்கத் தலைவா் பொன்சிவா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்களான கட்டுமானத் தொழிலாளா்கள், புலம் பெயா் தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், சுயதொழில் செய்வோா், நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள், மதிய உணவுத் திட்ட பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள், நூறுநாள் பணியில் ஈடுபடுவோா், செங்கல் சூளைத் தொழிலாளா்கள், இதர அமைப்பு சாரா தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக வலைதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT