திருச்சி

அக்.2 இல் கிராம சபைக்கூட்டங்கள்: ஆட்சியா்

30th Sep 2021 06:06 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் அக். 2 ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மேலும் தெரிவித்தது:

கூட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. காலை 10 முதல் பகல் 1 மணி வரை கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறும். மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறும் பகுதிகளில் மட்டும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறாது. கிராம சபைக்கூட்டங்களில் அனைத்து வாக்காளா்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT