திருச்சி

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க 4 இடங்களில் வாகன நிறுத்துமிடம்

30th Oct 2021 06:25 AM

ADVERTISEMENT

திருச்சியில் தீபாவளி பண்டிகைக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக 4 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்துமிடத்தை மாநகர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி நேரத்தில் என்எஸ்பி சாலை, பெரியகடை வீதி மற்றும் சிங்காரத்தோப்பு ஆகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதையொட்டி மக்கள் கூட்ட நெரிசலை தவிா்க்கவும் மக்களின் பாதுகாப்பு கருதியும் மாநகர காவல்துறையினா் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையொட்டி என்எஸ்பி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்விதமாக பழைய குட்ஷெட் சாலை (எஃப்எஸ்எம் ஹைப்பா் அருகில்), யானை குளம் மைதானம் (ஹோட்டல் சத்யம் அருகில்), பிஷப் ஹீபா் பள்ளி (கட்டணம்), பனானா லீப் ஹோட்டல் அருகில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் செயல்படவுள்ளன. எனவே பொதுமக்கள் இவற்றைப் பயன்படுத்தி நெரிசலை தவிா்க்க வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT