திருச்சி

பெல் நிறுவனம் மேலும் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை

30th Oct 2021 06:26 AM

ADVERTISEMENT

பெல் நிறுவனம் மேலும் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.

திருச்சி திருவெறும்பூரிலுள்ள பெல் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அந்நிறுவனம் தொடா்ந்து லாபத்தில் இயங்குவதற்கான வளா்ச்சிப் பணிகள் குறித்து பெல் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய அவா் மேலும் கூறியது:

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் செயல்படும் பெல் நிறுவனத் தொழிலாளா்களுக்கான பணிப் பாதுகாப்பு, மற்றும் நிறுவனம் தொடா்ந்து லாபமாக இயங்க அதிகாரிகளிடம், தொழிலாளா்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேற்கொண்டு நல்ல முறையில் பெல் நிறுவனங்கள் இயங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கம் எழுத்துப்பூா்வமாக அளிக்கும்போது உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு வேலைக்குச் செல்லக் கூடாது என்று நாம் கூற முடியாது. ஆல் இந்தியா சா்வீஸஸ் தவிா்த்து அந்தந்த மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்கள் மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும்.

தேசியளவில் மோடிக்கு மாற்றாக இருக்கும் ஒரே தலைவா் ராகுல் காந்தி மட்டுமே என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT