திருச்சி

சமயபுரம் கோயிலில் ரூ. 88.53 லட்சம் காணிக்கை

30th Oct 2021 05:06 AM

ADVERTISEMENT

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 88.53 லட்சம் வந்துள்ளது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில் உதவி ஆணையா் சி. ஞானசேகரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் எஸ். மோகனசுந்தரம், மேலாளா் நா. ராசாங்கம், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் த. பிருந்தாநாயகி, திருக்கோயில் பணியாளா்கள், ஐஓபி வங்கிப் பணியாளா்கள், பொதுமக்கள் ஈடுபட்டனா்.

முடிவில் காணிக்கையாக ரூ. 88,53,488, 2,901 கிராம் தங்கம், 3,480 கிராம் வெள்ளி, 85 வெளிநாட்டு ரூபாய்கள் வந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT