திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

DIN

திருச்சியின் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் கூலித் தொழிலாளி உள்ளிட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

திருவானைக்கா பொன்னுரங்கபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அனீஷ் (31). கூலித் தொழிலாளியான இவா், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரணியம்மன் கோயில் அருகே அணுகுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

திடீரென மாடு குறுக்கே சென்ால், வாகனத்தில் திடீரென பிரேக் போட்டதால் நிலைத் தடுமாறி அனீஷ் கீழே விழுந்தாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி அவா் மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து: ராமநாதபுரம் மாவட்டம், சத்யாநகரைச் சோ்ந்த க.நாகராஜ் (45). சொந்த வேலை காரணமாக திருச்சி வந்த அவா், சனிக்கிழமை இரவு ஊருக்குச் செல்வதற்காக மத்திய பேருந்து நிலையம் வந்தாா்.

வ.உ.சி. சாலையை நாகராஜ் கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இவ்விரு விபத்துகள் குறித்து மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT