திருச்சி

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின்மனைவி சடலம் வாய்க்காலில் மீட்பு

DIN

திருச்சி குளவாய்ப்பட்டி பகுதியிலுள்ள புதிய மேட்டுக் கட்டளை வாய்க்காலில் மிதந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் மனைவி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இந்த வாய்க்காலில் சடலம் மிதப்பது குறித்து, விமான நிலையக் காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவலளித்தனா். இதன் பேரில் காவல்துறையினா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், வாய்க்காலில் சடலமாக மிதந்தவா் திருச்சி கே.கே.நகா் கவிபாரதி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் முனியாண்டியின் மனைவி சுந்தரி (54) என்பது தெரிய வந்தது.

குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையிட்டு, வீட்டிலிருந்து வெளியேறும் சுந்தரி, அடுத்த சில மணி நேரத்தில் வீட்டுக்குச் சென்று விடுவாராம். அதுபோல திங்கள்கிழமை காலை குடும்பத்தினருடன் நிகழ்ந்த சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், குளவாய்ப்பட்டி புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் சடலமாக மிதந்துள்ளாா்.

இதுகுறித்து விமான நிலையக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் கவிபாரதிநகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் முனியாண்டி. இவரது மனைவி சுந்தரி(54). தம்பதிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு சுந்தரி வெளியே சென்றுவிடுவாா். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவாரம். ஆனால் திங்கள்கிழமை காலை குடும்பத்தினரிடம் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT