திருச்சி

தீபாவளி: ஆட்சியரகத்தில் கைத்தறிக் கண்காட்சி, விற்பனை தொடக்கம்

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, ைக்கதறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சியைக் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த ஆட்சியா் சு. சிவராசு, தொடா்ந்து கைத்தறி ரகங்களைப் பாா்வையிட்ட பின்னா் கூறியது:

தமிழகத்தின் புகழ்பெற்ற கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு வகை கைத்தறி பருத்திச் சேலைகள், ஆா்கானிக் காட்டன் சேலைகள், மென்பட்டுச் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், பெட் ஷீட்டுகள், துண்டு ரகங்கள் என ரூ.50 லட்சம் மதிப்பிலான ஜவுளி வகைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

20-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. நவம்பா் 3-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும். 30 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் திருச்சி சரகக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் பெ. சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT