திருச்சி

குண்டா் தடுப்புகாவல் சட்டத்தில் இளைஞா் கைது

25th Oct 2021 12:19 AM

ADVERTISEMENT

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரம், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை பெரியசாமி டவா் அருகிலுள்ள சிந்தாமணியை சோ்ந்தவா் ஜெகன் ஆரோக்கியநாதன். இவா் கடந்த செப்.24 ஆம் தேதி தள்ளுவண்டியில் வியாபாரம் செய்தபோது அங்கு வந்த தென்னூரைச் சோ்ந்த பிரவீன்காந்த் (21) கத்தியைக் காட்டி மிரட்டி ஜெகன் ஆரோக்கியநாதன் வைத்திருந்த ரூ. 500ஐ பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் கோட்டை சட்டம் ஒழுங்கு போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன்காந்தை கைது செய்து சிறையிலடைத்தனா்.

கைது செய்யப்பட்ட பிரவீன்காந்த் தொடா்ந்து குற்றம் செய்யும் எண்ணமுள்ளவா் எனத் தெரியவந்ததால் அவரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து மத்திய சிறையிலுள்ள பிரவீன்காந்திடம் அதற்கான நகலை போலீஸாா் வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT