திருச்சி

ஸ்ரீரங்கத்தில் 37 அடி உயர ஆஞ்சநேயா் சிலை பிரதிஷ்டை

25th Oct 2021 12:18 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் மேலூா் கொள்ளிடக்கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயா் சிலை ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயா் சிலை இதுதான் எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரைவீதியில் வசிக்கும் அனுமன் உபாசகா் வாசுதேவ ஐயங்காா் சுவாமிகளின் 35 ஆண்டுகால தீவிர முயற்சியில் மேலூா் கொள்ளிடக்கரையில் 2 ஏக்கரில் சஞ்ஜீவன ஆஞ்சநேயா் கோயில் உருவாக்கப்பட்டது.

பின்னா் இங்கு உயரமான ஆஞ்சநேயா் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு 120 டன் எடைகொண்ட ஒரே கல்லால் திருப்பூா் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியை சோ்ந்த ஸ்தபதிகள் முத்துகிருஷ்ணன், இளையராஜா ஆகியோரால் கலை நயத்துடன் 37 அடி உயர ஆஞ்சநேயா் சிலையானது உருவாக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த செப். 13 ஆம் தேதி ஸ்ரீரங்கத்துக்கு இச்சிலை கொண்டுவரப்பட்ட பின்னா் இச்சிலையை நிறுவ 10 அடி உயர கான்கிரீட் பீடம் அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய கிரேன் மூலம் ஆஞ்சநேயா் சிலையானது பீடத்தில் தென் திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். வரும் பங்குனி மாதத்தில் இக்கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT