திருச்சி

கரோனா தடுப்பூசி: மாநில அளவில் திருச்சி 3-ஆம் இடம்

25th Oct 2021 12:19 AM

ADVERTISEMENT

6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி திருச்சி மாவட்டம் மாநில அளவில் 3ஆம் இடத்தைப் பிடித்தது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து ஆயிரத்து 303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவற்றில் முதல் டோஸ் தடுப்பூசி 44 ஆயிரத்து 12 பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசி 57 ஆயிரத்து 291 பேருக்கும் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை சென்னையும், 2ஆம் இடத்தை கோவை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT